கொரானா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் பலி எண்ணிக்கை 1300 ஆனதால் பரபரப்பு

கொரானா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் பலி எண்ணிக்கை 1300 ஆனதால் பரபரப்பு

சீனாவிலும் வூகான் என்ற பகுதியில் பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனா மட்டுமின்றி ஜப்பான் தென்கொரியா போன்ற அண்டை நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றுடன் இந்த வைரஸ் தாக்குதலால் 1,355 பேர் பலியாகி உள்ளதாகவும் சுமார் 42,500 இந்த வைரஸ் தாக்குதல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் தெரிகிறது இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சீனாவில் மொத்தம் 142 பேர் பலியாகியுள்ளதாக சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரானா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு புதிய மருத்துவமனைகளை கட்டி தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும், இந்த வைரஸை இதுவரை ஒரு சதவிகிதம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது

The post கொரானா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 1300 ஆனதால் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy