தாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு…

தாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு…

கோழி, ஆட்டுக்கறியைவிட, மீன், நண்டு எனப்படும் கடல்வாழ் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. ஏனென்றால் கடல்வாழ் உயிரினத்தில் கொழுப்பு சத்து குறைவு. கூடவே, கோழி, ஆடு மாதிரி ஹார்மோன் ஊசி போட்டும் வளர்க்கப்படுவதில்லை. அதனால், மற்ற அசைவ உணவுகளைவிட கடல்வாழ் உயிரினத்தால் ஆன உணவுகள் பல மடங்கு ஆரோக்கியமானது. புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகமா சுரக்க வைக்க சுறாவினால் ஆன உணவுகள் உதவுது. அதனால், இன்று சுறாவினால் ஆன புட்டை எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள் :

சுறா மீன் – 300 கிராம்,நறுக்கிய இஞ்சி – 1½ டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் – 5,கறிவேப்பிலை – 1 கொத்து,நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்,வெங்காயம் – 100 கிராம்,மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்,எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,சோம்பு – 1 டீஸ்பூன்,எண்ணெய் – 50 மி.லி.,உப்பு – தேவைக்கு.

செய்முறை :

சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோலுரித்து உதிர்த்து கொள்ளவும். ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்த்து நன்றாக கிளறவும். மீன் நன்றாக உதிர்ந்து நன்கு வதங்கியதும் இறக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
The post தாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு… appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy