கணேஷ் வெங்கட்ராமன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட மாதுரி தீட்சித்

கணேஷ் வெங்கட்ராமன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட மாதுரி தீட்சித்

அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது நடித்திருக்கும் படத்தின் டிரைலரை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார்.

தமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். தற்போது இவர் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்னும் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார். ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ படத்தின் விக்ரம் சிங் என்ற வில்லனாக நடிக்கும் கணேஷ் இப்படத்தின் ஒரு வலிமை மிகுந்த தாதாவாக நடித்திருப்பதாகவும் அதற்காக அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், என் இள வயது முதலே என்னுள் ஈர்ப்பை உண்டாக்கிய மாதுரி தீட்சித் எனது முதல் இந்தி படத்தின் டிரைலரை வெளியிட்டிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

டிரைலரில் உள்ள உண்மையான அதிரடி சாகசங்களை நடிகை மாதுரி தீட்சித் பாராட்டியதோடு, கதாநாயகனாக நடிக்கும் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரமறிந்து நடித்திருக்கும் யுக்தியை பாராட்டினார். 

ஷைன்னா நாத் தயாரிப்பில் சேகர் சூரி இயக்கியிருக்கும் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ பிப்ரவரி 28ம் தேதி வெளியாகவுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan