அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – மீனா

அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – மீனா

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்பதில் நடிகை மீனா உறுதியாக இருக்கிறாராம்.

நடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மீனா, மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். குழந்தை பெற்றுக்கொண்ட கதாநாயகிகளை பெரும்பாலும்,`அம்மா’ வேடத்துக்கு தள்ளிவிடுவார்கள். 

ஆனால் மீனாவோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன்” என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இப்போது அவர், சிவா-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் `அண்ணாத்த’ படத்திலும், வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிடித்தமான வேடங்கள் வந்தால், தொடர்ந்து வெப் தொடரில் நடிக்க மீனா முடிவு செய்து இருக்கிறாராம்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan