பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா வேண்டுகோள்

பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா வேண்டுகோள்

பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும் என்று நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகை நமீதா பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”நான் ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறேன். ஆனால், 7 ஆண்டுகளாகி விட்டன. எதற்காக நமது நாட்டில் இந்தத் தீர்ப்புக்கு இவ்வளவு தாமதம் என்பதைப் பார்க்க வேண்டும்.

கண்டிப்பாக வரும் காலத்தில் இது மாதிரியான குற்றங்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும். அதுவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதே மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறக்கூடாது. நமது அரசாங்கம் இது தொடர்பாகச் சட்டத்தைக் கடுமையாக்குவார்கள் என நம்புகிறேன். பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும்’’ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan