கொரோனாவை விட ஆபத்தானவன் மனிதன் – பால சரவணன் ஆதங்கம்

கொரோனாவை விட ஆபத்தானவன் மனிதன் – பால சரவணன் ஆதங்கம்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் பால சரவணன், கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன் என்று ஆதங்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவவேண்டும். சானிடைசர் எனப்படும் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை ஆடிக்கடி கழுவி வைரஸ் தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் சானிடைசரை அதிக விலைக்கு விற்கின்றனர். இது தொடர்பாக காமெடி நடிகர் பால சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில் “கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன். மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் சானிடைசர் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்காக கடைக்கு சென்றேன். 60 ரூபாய் மதிப்புள்ள சானிடைசரை 135 ரூபாய் என்று விலை சொன்னார்கள். அது பற்றி கேட்டதற்கு ‘நான் என்ன பண்ணமுடியும். நான் இங்க வேலை தான் பார்க்கிறேன்’ என கடையில் இருந்தவர் கூறினார்.

ஒரு காபி கடைக்கு நண்பர்களுடன் சென்றேன். அங்கு பணியுரியும் பெண்ணும் அதிக விலைக்கு சானிடைசர் விற்பதாக சொன்னார். மேலும் என்னை போன்றே பலரும் புலம்பி வருகின்றனர். அவசர சூழ்நிலையில் இலவசமாக கொடுக்க வேண்டிய பொருட்களை இப்படி அநியாய இலாபத்திற்கு விற்பது சரியில்லை” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan