தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்

இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் இருந்து வந்ததும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக்கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 நாட்களாக தான் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், மேலும் 9 நாட்கள் இதேபோல் தான் இருக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தங்களைத்தானே தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என நந்தன் கூறியுள்ளார். இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள குஷ்பு, நந்தனை பாரட்டியுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan