திரைப்படம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

திரைப்படம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சிவகுமார் குடும்பத்தினர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.

“இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பெப்சி ஊழியர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரூ.1250 என கணக்கு வைத்தால் ரூ.2 கோடி ஆகிறது.

உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர். நிதி அளிப்பீர் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan