மோகன்லாலுக்கு கடும் கண்டனங்கள்

மோகன்லாலுக்கு கடும் கண்டனங்கள்

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலுக்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

இதுபற்றி பேசிய நடிகர் மோகன்லால், ஒன்றாக இணைந்து கைதட்டுவது ஒரு செயல் முறை. அந்த ஒலி மந்திரம் போன்று வைரஸையும் பாக்டீரியாக்களையும் அழிக்கக் கூடும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சிக்க தொடங்கி விட்டனர். ‘மோகன்லால்ஜி கை தட்டினா எப்படி பாக்டீரியாவும் வைரசும் அழியும்னு விளக்கமா சொல்ல முடியுமா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

ரஜினிக்கு பிறகு இவரு… இவங்களை எல்லாம் என்ன செய்யலாம்? என்று சிலரும் கடுமையாக கிண்டல் செய்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan