நமக்காக நிறைய பேர் வேலை செய்கிறார்கள் – மைம் கோபி

நமக்காக நிறைய பேர் வேலை செய்கிறார்கள் – மைம் கோபி

கொரோனா வைரஸ் வராமல் இருக்க நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்று நடிகர் மைம் கோபி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர்  மைம் கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. பிரதமர் சொன்னது போல் அனைவரும் 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். நமக்காக காவல் துறை, சுகாதாரத்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய நன்றிகள். ஒருவருக்கு பாதிப்பு வந்தால் அது அவர்களை சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கும். எனவே இதை உணர்ந்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan