வீட்டில் இருப்பவர்களுக்கு நடிகர் சௌந்தரராஜா சொல்லும் டிப்ஸ்

வீட்டில் இருப்பவர்களுக்கு நடிகர் சௌந்தரராஜா சொல்லும் டிப்ஸ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் இருக்கும் மக்களுக்கு நடிகர் சௌந்தரராஜா டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடை உத்தரவு போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். 

வீட்டில் இருப்பார்களுக்காக நடிகர் சௌந்தர ராஜா டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.  அதில், ஆரோக்கிய உணவுகளை உண்ணுங்கள், அளவாக உண்ணுங்கள். முடிந்த அளவு உடற்பயிற்சி செய்யுங்கள், வீட்டை வாகனங்களை கழுவி சுத்தம் செய்யுங்கள். அதிக அளவு டிவி மற்றும் செல்போன் உபயோகிக்காமல் புத்தகம் படியுங்கள். சமையல் செய்யப் பழகுங்கள், குடும்பத்தினர் மற்றும் உறவுகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
அதிக அளவு ஏசியை பயன் படுத்தாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை மற்றும்  அறிவின் அளவை சுயபரிசோதனை செய்யுங்கள்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan