கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – முதல்வர் நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய மகேஷ் பாபு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – முதல்வர் நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய மகேஷ் பாபு

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். 

இதுவரை பவன் கல்யாண் ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
தற்போது மகேஷ் பாபுவும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan