பெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி

பெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி

கொரோனா பரவலால் வேலை இழந்திருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகம் முடங்கி உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ரஜினிகாந்த், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதி வழங்கினர்.

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கினார்கள். தற்போது நடிகர் தனுஷ், ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். தயாரிப்பாளர் கே.ராஜன் ரூ.25 ஆயிரம் வழங்கி உள்ளார். மேலும் பல நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அரிசி மூட்டைகள் வழங்கி வருகிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan