கொரோனா பீதியால் ஆடம்பர திருமணத்தை தவிர்த்த நடிகர்

கொரோனா பீதியால் ஆடம்பர திருமணத்தை தவிர்த்த நடிகர்

கொரோனா பீதியால், துபாயில் ஆடம்பரமாக நடைபெற இருந்த திருமணத்தை ரத்து செய்து விட்டு, பிரபல நடிகர் ஒருவர் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் செய்ய உள்ளாராம்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நிதின். இவர் தெலுங்கில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படம், அதே பெயரில் ஜெயம் ரவி நடிக்க தமிழில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நிதின் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ராம்கோபால் வர்மா இயக்கிய ‘அக்யுத்’ இந்தி படத்திலும் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இவருக்கும், ஷாலினி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தை ஏப்ரல் 15 மற்றும் 16-ந் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிட்டனர். துபாய்க்கு நடிகர்-நடிகைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று அதிகமானோரை அழைத்து சென்று ஆடம்பரமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, துபாய் திருமண ஏற்பாடுகளை நிதின் ரத்து செய்துவிட்டார். ஐதராபாத்தில் உள்ள வீட்டிலேயே திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan