பழைய படங்களை பார்த்து ரசிக்கும் யோகி பாபு

பழைய படங்களை பார்த்து ரசிக்கும் யோகி பாபு

ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் யோகி பாபு, பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார்.

தேசிய ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலுள்ள வீட்டில் இருக்கிறார் யோகி பாபு.  

வீட்டில் இருப்பது குறித்து யோகி பாபு கூறும்போது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி ஆகியோருடன் பல வருடங்களுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என்று மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டே இருந்த நான், இப்போதுதான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன். 

சிவாஜியின் கர்ணன், விசுவின் சம்சாரம் அது மின்சாரம், கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் உள்பட நிறைய படங்கள் பார்த்தேன். கொரோனா வைரஸ் பரவலால் சினிமா தொழிலாளர்கள் மட்டுமன்றி,  நடைபாதை வியாபாரிகள் உள்பட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் செய்து வருகிறேன். வீட்டுக்குள் எல்லோரும் சந்தோஷமாக இருந்தாலும், நாட்டில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கிருமி பரவிக் கொண்டிருக்கிறது. அதற்காக நாம் அனைவரும் தனித்திருப்போம்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan