எல்லாம் போலி – மக்கள் விரும்பத்தக்கதுடர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு

எல்லாம் போலி – மக்கள் விரும்பத்தக்கதுடர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு

விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. 

தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில், நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் இல்லை. டிவிட்டரில் மட்டுமே இருக்கிறேன்.  மற்றது எல்லாம் போலி கணக்குகள் என்று பதிவு செய்திருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan