மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகர்

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் திறக்காததால் பிரபல நடிகர் தன் மகனுக்கு தானே முடி வெட்டி அழகு பார்த்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஆண்கள் சலூன்களுக்கு செல்ல முடியாமல் தாடியும், மீசையுமாக, நீண்ட தலைமுடியுடன் உள்ளனர். குழந்தைகளும் முடி வளர்ந்து அதை வெட்ட ஆள் இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் ஜெயம் ரவி மூத்த மகன் ஆரவுக்கு முடிவெட்டிவிட்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜெயம் ரவி மட்டும் அல்ல மேலும் சில நடிகர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு முடிவெட்டிவிட்டுள்ளனர். ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஆரவ் தன் அப்பாவின் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan