அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை – ஸ்ருதிஹாசன்

அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை – ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களிடம் பேசும்போது அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை என்று கூறி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தந்தையிடம் பெற்ற மோசமான தண்டனை எது என ஒரு ரசிகர் கேட்டார். ‘அப்பா என்னிடம் கோபப்பட்டு கத்தியதில்லை, தண்டனையும் அளித்ததில்லை. அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. 

 எப்போதும் காரணம், தர்க்கத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை நான் தவறு செய்தேன். அதற்கு, நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் என்றார் அப்பா. அவர் தற்போது சென்னையில் நலமாக உள்ளார். பாதுகாப்புக்காக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.   

ஊரங்கு முடிந்த பிறகு முதலில் படப் பிடிப்புக்குச் செல்வேன். படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றுவதை மிகவும் மிஸ் செய்கிறேன். ஆனால், பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே செல்வேன்.  கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டும் போக்கு பற்றி படிக்கிறேன்.  

இது வருத்தம் அளிக்கிறது. சிலர் பயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரம் நடக்கிறது. இதையெல்லாம் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கொரோனா நோயாளிகளிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது’ இவ்வாறு கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan