நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்

நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்

சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சென்ற நடிகர் ராதாரவி அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தவர் ராதாரவி. இவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்து பேச்சாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எம்.கைகாட்டியில் மார்வளா செல்லும் சாலையில் உள்ள தனது சொகுசு பங்களாவுக்கு வந்தார். அங்கு அவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் நடிகர் ராதாரவியின் சொகுசு பங்களாவுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் அனுமதி பெற்று வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பங்களா முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 

மேலும் நடிகர் ராதாரவி உள்பட குடும்பத்தினர் அனைவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மாலை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் பங்களாவுக்கு திரும்பி சென்றனர். சென்னையில் இருந்து கோத்தகிரி வந்த நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan