நக்சலைட் வேடத்திற்காக பிரத்யேக பயிற்சி எடுக்கவுள்ள சாய்பல்லவி

நக்சலைட் வேடத்திற்காக பிரத்யேக பயிற்சி எடுக்கவுள்ள சாய்பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் சாய்பல்லவி, நக்சலைட் வேடத்திற்காக பயிற்சி எடுக்கவுள்ளாராம்.

தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992, நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விரத பர்வம் 1992 படத்தில் ராணா போலீஸ் அதிகாரியாகவும், சாய் பல்லவி நாட்டுப்புற பாடகராக இருந்து பின்னர் நக்சலைட்டாக மாறும் வேடத்திலும் நடிக்கிறார். 

வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளும் இடம் பெற்றுள்ளதாம். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி  நக்சலைட் வேடத்திற்காக பிரத்யேக பயிற்சி எடுக்க உள்ளாராம். இதற்காக படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ள முன்னாள் நக்சலைட் ஒருவரிடம் அவர் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பயிற்சி எடுத்துக்கொள்ள இருக்கிறாராம். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan