இந்தியாவிலேயே சிறந்த 3 நடிகர்கள் இவர்கள் தான் – திரிஷா சொல்கிறார்

இந்தியாவிலேயே சிறந்த 3 நடிகர்கள் இவர்கள் தான் – திரிஷா சொல்கிறார்

ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடிய திரிஷா, இந்தியாவிலேயே சிறந்த 3 நடிகர்கள் யார் என்பதை கூறியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இது ரிலீசாக உள்ளது. இதுதவிர ரசிகர்களுடனும் அவ்வப்போது உரையாடி வருகிறார். 

அந்தவகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர், உங்கள் பார்வையில் இந்திய அளவில் சிறந்த 3 நடிகர்கள் யார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திரிஷா, கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான் என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan