தனிமைப்படுத்தப்பட்டேனா? – ராதாரவி விளக்கம்

தனிமைப்படுத்தப்பட்டேனா? – ராதாரவி விளக்கம்

குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சென்ற நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்குக் குடும்பத்துடன் சென்றார் ராதாரவி.

அனுமதி பெற்று வந்திருந்தாலும் கொரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு வந்திருப்பதால் நகராட்சி சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலின்படி வீட்டில் 14 நாள்களுக்கு ராதாரவியும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அடையாள அட்டையை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது பங்களாவின் சுவரில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராதாரவியின் குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் ராதாரவி. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். நான் நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan