நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் – வெளியீடு தேதி அறிவிப்பு

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் – வெளியீடு தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக வருகிற 29-ந் தேதி ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் தியேட்டர்களுக்கு பதிலாக ஒடிடி தளத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

A very special journey that I can’t wait for you all to experience ! 😊#PenguinOnPrime on 19th June! #WorldPremiereOnPrime@PrimeVideoIN@karthiksubbaraj@EashvarKarthic@Music_Santhosh@KharthikD@Anilkrish88@StonebenchFilms@kaarthekeyens@PassionStudios_pic.twitter.com/UbUBmdTPCk

— Keerthy Suresh (@KeerthyOfficial)

May 15, 2020

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயனண் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan