ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பிரபல நடிகர் வெளியிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிக்கு சென்ற மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

குழந்தைக்கு என்ன பெயர் சூட்டியுள்ளனர் என தற்போது வரை ஜி.வி.பிரகாஷ் அறிவிக்கவில்லை. அதனால் அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மகளுக்கு ‘அன்வி’ என பெயரிடப்பட்டிருப்பதாக பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இது பற்றி கமெண்டில் கேட்ட நிலையில், குழந்தையின் பெயரை அந்த பதிவில் இருந்து நீக்கிவிட்டார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan