பாகுபலியாக மாறிய டேவிட் வார்னர்…. மிகுதியாகப் பகிரப்படும் டிக்டாக் காணொளி

பாகுபலியாக மாறிய டேவிட் வார்னர்…. மிகுதியாகப் பகிரப்படும் டிக்டாக் காணொளி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர், பாகுபலி கெட்-அப்பில் டிக்டாக் செய்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாததால், சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களை வார்னர் டிக்டாக் செய்து மகிழ்வித்து வருகிறார். சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவர் ஏற்கனவே, அல்லு அர்ஜுனின் அல வைகுந்தபரம்லு படத்தில் இருந்து புட்ட பொம்மா மற்றும் ராமுலு போன்ற பாடல்களுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் டிக்டாக் செய்து அசத்தினார். 

தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடித்து உலகளவில் பிரபலமான பாகுபலி படத்தில் இடம்பெறும், ‘அமரேந்திர பாகுபலி ஆகிய நான்’ என்ற வசனத்தை பாகுபலி கெட்டப்பில் டிக்டாக் செய்து அசத்தி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan