ஆசிரியர் பட விளம்பரம் குறித்து மக்கள் விரும்பத்தக்க அப்டேட்டை வெளியிட்ட அர்ஜுன் தாஸ்

ஆசிரியர் பட விளம்பரம் குறித்து மக்கள் விரும்பத்தக்க அப்டேட்டை வெளியிட்ட அர்ஜுன் தாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டிரெய்லர் குறித்த மாஸ் அப்டேட்டை அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாஸ்டர் டிரெய்லர் அப்டேட்டை அவரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அர்ஜுன் தாஸ், “மாஸ்டர் பட டிரெய்லரை 6 முறை பார்த்து விட்டேன். டிரெய்லர் வேற லெவல்ல இருக்கு. 

எப்போது டிரெய்லர் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். சரியான தருணத்தில் டிரெய்லர் வெளியிடப்படும். அதில் வரும் ஒரு டயலாக் மரண மாஸா இருக்கு, கண்டிப்பாக அதற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். எனவே டிரெய்லர் வெளியாகும்வரை காத்திருப்போம்” என அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan