இப்போதைக்கு பொதுத்தேர்வு வேண்டாம்…. அரசுக்கு விவேக் வேண்டுகோள்

இப்போதைக்கு பொதுத்தேர்வு வேண்டாம்…. அரசுக்கு விவேக் வேண்டுகோள்

ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துமாறு அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சத்தால் நிறுத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். 

தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருப்பதாவது: “பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு செய்து பரிசீலிக்கவும்”. இவ்வாறு விவேக் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.

— Vivekh actor (@Actor_Vivek)

May 17, 2020

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan