பாகுபலி இசையமைப்பாளரின் திடீர் முடிவு

பாகுபலி இசையமைப்பாளரின் திடீர் முடிவு

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் எம்.எம்.கீரவாணி. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்பட சுமார் 220 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.

சர்வதேச அளவில் வெற்றி பெற்ற பாகுபலி படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் இந்திய அளவில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடமாக இசைப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடம் மரகதமணி என்கிற பெயரிலும் நன்கு அறிமுகமானவர்.

தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு இசையமைத்து வரும் கீரவாணி, சமீபத்தில் ஒரு பேட்டியின்போது விரைவில் தான் இசைத்துறையை விட்டு ஓய்வுபெற போவதாக சொல்லியிருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan