வதந்தியை பார்த்து ரசித்த பிரியா பவானி சங்கர்

வதந்தியை பார்த்து ரசித்த பிரியா பவானி சங்கர்

தன்னைப்பற்றி வந்த செய்தியை நடிகை பிரியா பவானி சங்கர் படித்து ரசித்ததாக அவர் கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் குறித்து கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன.

தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவருடன் காதல் என்பது குறித்த பதிவை நடிகை பிரியா பவானி சங்கர் பதிவு செய்தார். அந்த பதிவை வைத்து அவருடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியது. இதனையடுத்து அவரது தரப்பினர் விளக்கம் அளித்தபோது பிரியா பவானி சங்கரின் காதலுக்கும் அந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது பிரேக் அப் குறித்த வதந்திகளை அவர் படித்து சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை பற்றிய வதந்திகளை படித்து தான் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan