பொன்னியின் செல்வனில் நடிக்கிறேனா? – மவுனம் கலைத்த சாந்தனு

பொன்னியின் செல்வனில் நடிக்கிறேனா? – மவுனம் கலைத்த சாந்தனு

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக செய்தி பரவி வந்த நிலையில், நடிகர் சாந்தனு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். 

இந்நிலையில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சாந்தனு நடிப்பதாக செய்திகள் உலா வந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சாந்தனு, வானம் கொட்டட்டும் படத்தில் எனது நடிப்பை பார்த்த மணிரத்னம், அதன் இயக்குனர் தனாவிடம் பாரட்டியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் என்னை நடிக்க வைக்கலாம் என மணிரத்னம் முதலில் யோசித்தாராம். ஆனால் வயது வித்தியாசம் காரணமாக அவர் அந்த யோசனையை கைவிட்டுவிட்டார். எனவே நான் அந்த படத்தில் நடிக்கவில்லை, என சாந்தனு கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan