அடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்

அடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்

அடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி இருக்கு என்று நடிகர் சாந்தனு பயத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ஒரு குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டார். 

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் பிரபலங்கள் பலரும் ரசித்து பாராட்டு தெரிவித்தார்கள். 

இந்நிலையில் இந்த குறும்படத்தை சாந்தனுவின் தந்தை இயக்குநர் கே பாக்யராஜ் பார்த்திருக்கிறார்.
இவர் பார்க்கும் போது சாந்தனுவிற்கு பயம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், Biggest task of #KonjamCoronaNaraiyyaKadhal was showing the movie to d ‘HeadMaster’, my dad #KBhagyaraj 😂🤪 It was like passing the +2 examination ! “ அடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி ” 😂🤣 Watch #KoCoNaKa here on #WithLoveShanthnuKiki என்றும், That “நீ படிச்ச ஸ்கூல் ல நா ஹெட்மாஸ்டர் டா” moment 🤓🙆🏻‍♂️ என்று பதிவு செய்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan