இதுதான் 30 வருட சேலஞ்சா? – மிகுதியாகப் பகிரப்படும் சிரஞ்சீவியின் புகைப்படம்

இதுதான் 30 வருட சேலஞ்சா? – மிகுதியாகப் பகிரப்படும் சிரஞ்சீவியின் புகைப்படம்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிரபலங்கள் வீட்டில் தங்கள் உறவினர்களோடு நேரத்தை செலவழித்து வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களோடு அவ்வப்போது உரையாடி வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் இணைந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் மனைவியுடன் சமைக்கும் புகைப்படத்தையும், தற்போது லாக்டவுன் சமயத்தில் வீட்டில் மனைவியுடன் சமைப்பதையும் ஒப்பிட்டு “காலம் மாறினாலும்…. செய்யும் விஷயங்கள் மாறவில்லை” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan