“உங்களை தினமும் மிஸ் பண்றேன்” – தந்தை முரளி குறித்து அதர்வா உருக்கம்

“உங்களை தினமும் மிஸ் பண்றேன்” – தந்தை முரளி குறித்து அதர்வா உருக்கம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அதர்வா, தனது தந்தை முரளி குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இன்றைய இளம் கதாநாயகர்களில் முன்வரிசையில் உள்ளவர், அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன். வாரிசு நடிகராக இருந்தாலும், தனது கடின உழைப்பால் திரையுலகில் படிப்படியாக வளர்ந்து வருகிறார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது தந்தை முரளிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், நான் பார்த்ததில் மிக பணிவான மற்றும் வலிமையான நபர் நீங்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நாங்கள் உங்களை விரும்புகிறோம், தினமும் உங்களை மிஸ் பண்றோம் என கூறி குழந்தையாக அப்பாவின் கழுத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

To the coolest and the strongest person I’ve ever know . Happy birthday dad ! We love you and miss you everyday ! 🤗✨ pic.twitter.com/jOWhjL9Mwl

— Atharvaa (@Atharvaamurali)

May 19, 2020

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan