விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி

விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி

விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக, வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து, தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.

தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள் மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan