ஓவியம் மூலம் நிதி திரட்டும் பிரபல நடிகை

ஓவியம் மூலம் நிதி திரட்டும் பிரபல நடிகை

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் சோனாக்ஷி சின்கா ஓவியம் ஓவியம் மூலம் நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையான சோனாக்சி சின்கா தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து இருந்தார். சோனாக்சி சின்கா ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ளவர். அவரது ஓவியங்கள் சமூக வலைதளங்களின் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.  

இது குறித்து சோனாக்ஷி சின்கா கூறியுள்ளதாவது: ”நான் என்னுடைய நண்பர்களை மிஸ் செய்கிறேன். ஆனால் வேறொரு கோணத்தில் சிந்திக்கும்போது இது ஒரு பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். வீட்டில் இருப்பது எனக்குச் சவாலானதாக இருக்கவில்லை.
ஏனெனில் என் அன்புக்குரியவர்களோடு வீட்டில் இருக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும். 

 வெளியே தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு, குடும்பத்தை விட்டு, சாப்பிட ஏதுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் சவாலானது. நான் அவர்களுக்காக வருந்துகிறேன், அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். இந்த ஊரடங்கின் மூலம் நான் மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கிவிட்டேன். அதன் மூலம் பெரிய அளவில் உதவி செய்ய விரும்புகிறேன். எனவே என்னுடைய ஓவியங்களின் மூலம் நிதி திரட்ட தீர்மானித்துள்ளேன்”. இவ்வாறு சோனாக்சி கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan