பாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்

பாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜ்… தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் மகள்

பாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜின் வருகைக்காக அவரது மகள் காத்திருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடித்து வரும் ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றார். அப்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவினர் அங்கேயே சிக்கி கொண்டனர்.  

சுமார் 70 நாட்களுக்கு மேலாக ஜார்டனில் இருக்கும் பிருத்விராஜ் சீக்கிரமே வீடு திரும்புவது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரது மனைவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிருத்விராஜின் மகள், My Father is Coming என எழுதும் வீடியோவை பதிவிட்டு, அவரது வருகை குறித்து தெரிவித்திருக்கிறார் அவர் மனைவி. 

 இந்த பதிவுக்கு கமன்ட் செய்துள்ள பிருத்விராஜ், ”சீக்கிரமே திரும்பி வந்து, என் இளவரசியுடனும், என் ராணியுடனும் இருக்க ஆசைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan