விஜய் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஆண்ட்ரியா

விஜய் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஆண்ட்ரியா

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக ஆண்ட்ரியா கூறியிருக்கிறார்.

சினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர்,  டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது: முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்’ பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா’னு என்னைக் கலாய்ச்சார்.

விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்’ செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்’லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan