அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் இடம்பெறும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகை நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.

‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். 

இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது: “நெற்றிக்கண் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் திரில்லர் படம். இப்படத்தில் வரும் சண்டை காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும். சண்டை காட்சிகளில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த படத்தில் வித்தியாசமான நயன்தாராவை ரசிகர்கள் பார்ப்பார்கள்”  என அவர் கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan