மும்பையில் தவித்த 90 தமிழர்கள்… சொந்த ஊர் செல்ல உதவிய பிரபல இயக்குனர்

மும்பையில் தவித்த 90 தமிழர்கள்… சொந்த ஊர் செல்ல உதவிய பிரபல இயக்குனர்

மும்பையில் சிக்கித்தவித்த 90 தமிழர்களை பிரபல இயக்குனர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி உதவியுடன் மீட்டு சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளார்.

சினேகா-பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், சுசி கணேசன். இவர் பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2 போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது மும்பையில் வசித்து வரும் இவர், சில இந்தி படங்களையும் இயக்கி வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த சூழலில், மதுரை மற்றும் விருதுநகரை சேர்ந்த 90 தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் மும்பையில் தவித்து வந்தனர். 

இதுகுறித்து அறிந்த இயக்குனர் சுசி கணேசன் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் உதவியுடன், அந்த 90 தமிழர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்துள்ளார்.

‘ஐ.ஏ.எஸ்.’ என்பது கவர்ச்சியான பதவியல்ல… களமிறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த சம்பவம், இது. நன்றிகள் பல அன்பழகன் புரோ என சுசி கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan