புற்றுநோய் பாதிப்பு…. 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

புற்றுநோய் பாதிப்பு…. 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் சல்மான்கான், அசின் நடித்த ரெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மோகித் பஹேல். சோர் ஹே, காலி காலி, ஜபாரியா ஜோடி, உவா, மிலன் காக்கீஸ் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி, சயீப் அலிகான் நடிப்பில் தயாராகி வரும் பண்டீ அவுர் பப்ளி 2 படத்துக்கும் ஒப்பந்தம் செய்து இருந்தனர். 

இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மோகித் பஹேலுக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான உ.பி. மாநிலம் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 26.

மோகித் பஹேலுடன் ஜபாரியா ஜோடி படத்தில் நடித்துள்ள நடிகை பிரனீதி சோபரா தனது டுவிட்டர் பக்கத்தில், “மிகவும் திறமையான நடிகர். பழக இனிமையானவர். எப்போதும் உற்சாகமாக நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan