திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது? – அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது? – அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது? என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சினிமா துறைக்கு மத்திய அரசிடம் என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ, அதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலமாக மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். நடிகர்களின் சம்பள விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தால், அதற்கு அரசு உதவும். கொரோனா வைரஸ் பரவுதலை முழுமையாக கட்டுப்படுத்திய பின்னர் திரையரங்குகளை மீண்டும் திறப்பது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan