நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி

நயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி

நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி அவருடைய சிகரெட் பற்றி சொல்லியிருக்கிறார்.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பங்கேற்ற கலந்துரையாடலில், அவரது அடுத்த படமான மூக்குத்தி அம்மன் படம் குறித்து மனம்திறந்துள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் படம் திரையரங்கில் வெளியான பின்னரே ஓடிடி இணையதளத்தில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். கெரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கும் பட்சத்தில் முதல் படமாக மூக்குத்தி அம்மன் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

 நயன்தாரா பற்றிய கேள்விக்கு, தான் இதுவரை நடித்த நாயகிகளுள் மிகவும் ஒழுக்கமான நடிகை அவர், அதனாலேயே ஆண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த துறையில், அவர் தனித்து நிற்கிறார் என்று கூறியிருக்கிறார். 

ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி நடிக்க, சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan