திருமண செய்தி அறிந்ததும் முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள்? – ராணா பளீச் பதில்

திருமண செய்தி அறிந்ததும் முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள்? – ராணா பளீச் பதில்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா, திருமணம் குறித்து அறிந்ததும் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.

அஜித்குமாருடன் ஆரம்பம் மற்றும் பெங்களூரு நாட்கள் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் ராணா. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் நடித்து வருகிறார். இவரையும் திரிஷா உள்ளிட்ட சில நடிகைகளையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. 

இந்த நிலையில் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. மிஹீகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து ராணா கூறியதாவது: மிஹீகாவை எனக்கு பல வருடங்களாக தெரியும். எனது வீட்டின் பக்கத்தில்தான் அவரது வீடும் இருந்தது. அவருடன் அதிக நாட்கள் பழகி இருக்கிறேன். அவரது குணம் எனக்கு பிடித்தது.

என் வாழ்க்கை துணையாக மிஹீகாதான் சரியானவர் என்று தோன்றியது. அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்புதான் ஏற்பட்டது. அவரை நேரில் அழைத்து எனது விருப்பத்தை சொன்னேன். அவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஒருவருக்கு நேர்மையாக இருப்பது முக்கியம். 

அப்படி இருக்க முடிவு செய்துள்ளேன். திரையுலகில் இருப்பவரை மணக்க நான் எப்போதுமே நினைத்தது இல்லை. நான் திருமணம் செய்து கொள்ளப்போவதை அறிந்து எனது முன்னாள் காதலிகள் வாழ்த்து தெரிவித்தனர்”. இவ்வாறு ராணா கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan