படம் வெளியீடு ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்

படம் வெளியீடு ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்

படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க… என்று பிரபல நடிகர் தனுஷ் படம் பற்றி டுவிட் செய்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் கர்ணன். தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகிறது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு துவங்கவிருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் நட்டி நட்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், மாரி செல்வராஜ்..  ஆக சிறந்த இயக்குனர்…. படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க… என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 

மாரி செல்வராஜ்.. ஆக சிறந்த இயக்குனர்…. படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க…. 👍👍👍

— N.Nataraja Subramani (@natty_nataraj)

May 26, 2020

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan