இது படமல்ல… பாடம்… ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்

இது படமல்ல… பாடம்… ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்

பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் நாளை ரிலீஸ் செய்ய உள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி டுவிட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்ல முடியா வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குனரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த “பொன்மகள் வந்தாள்” கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும். ” என குறிப்பிட்டுள்ளார்.

அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்

கண்களை கலங்கடித்து விட்டது. இந்த “பொன்மகள் வந்தாள்” கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்.. @Suriya_offl#Jodhika#bakyaraj@rparthiepan@imKBRshanthnu@2D_ENTPVTLTD#prathappothan@fredrickjj#pandirajan

— Bharathiraja (@offBharathiraja)

May 28, 2020

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan