மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது இப்படத்தில் காதோடு என்ற பாடலை தனுஷ், அதிதி ராவ் பாடி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இப்பாடல் விரையில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதுபோல், சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று பற்றிக் கூறும்போது, மூன்று பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் ஆடியோ பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

How about the #jail single soon … #kaathodu sung by @dhanushkraja@aditiraohydari@KaviKabilan2 …. excited 😍 … updates soon …

— G.V.Prakash Kumar (@gvprakash)

May 28, 2020

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan