திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கு ஈடே கிடையாது – சூர்யா

திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கு ஈடே கிடையாது – சூர்யா

திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது என்று நடிகர் சூர்யா பேட்டி அளித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடுவது குறித்து பேட்டியளித்திருக்கும் நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது, ‘திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது.

 ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும் சூழலில் மாற்று வழியை கண்டறிவது அவசியமாக உள்ளது. மேலும் வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படும் மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.

மீண்டும் படப்பிடிப்பு துவங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். முதலில் உட்புற படப்பிடிப்பு பின்னர் வெளிப்புற படப்பிடிப்பை துவங்கலாம். ஆனால் அதிலும் கட்டுப்பாடு அவசியம். திரையரங்குகளின் சூழலை பொறுத்தவரை ஆலிவுட்டில் கிறிஸ்டபர் நோலனின் ‘டெனெட்’படம் வெளியாகி அதற்கு கிடைக்கும் ஆதரவை கொண்டு முடிவெடுக்கலாம்’ என்று கூறியுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan