இயக்குனர் விஜய் தந்தையானார்

இயக்குனர் விஜய் தந்தையானார்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய்க்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த பின் மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் இன்று (30/05/2020) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இயக்குநர் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan