ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்

ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்திற்காக நடிகர் சந்தானம் ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினாராம்.

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் யோகி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: சந்தானம் இப்படத்தில் மிடில்கிளாஸ் பையனாகவும், விளையாட்டு வீரராகவும் நடித்துள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்சாக வைத்துள்ளோம். மூன்று வேடங்கள் என்பதால் படமாக்க சற்று கடினமாக இருந்தது. 

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாற 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும். அந்த வகையில் சந்தானம் ஒரு நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினார். கஷ்டம் தான் என்றாலும், சந்தானம் இதனை முகம்சுளிக்காமல் செய்தார். தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் டப்பிங் பணிகளும் தொடங்கி உள்ளன. விரைவில் இது நிறைவடையும் என அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan