ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி சங்கர்

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி சங்கர்

தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழில் அதிக படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை, ஹரீஷ் கல்யாண் உடன் பெல்லி சூப்புலு தெலுங்கு பட ரீமேக், அதர்வாவின் குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசடதபற , ஜீவாவின் களத்தில் சந்திப்போம் என ஒரு பெரும் பட்டியலே பிரியா பவானி சங்கர் கைவசம் இருக்கிறது.

பிரியாவின் முக்கிய பொழுதுபோக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது தான். ஆனால் அது சில நேரம் அவருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சமீபத்தில் ஒரு சமூக பிரச்சினை தொடர்பாக நடிகை பிரியா வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டுள்ளார்.

இதனால் கோபமான பிரியாவின் ரசிகர்கள் அந்த பெண்ணை மோசமாக விமர்சித்து இருக்கின்றனர். இது பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரியா பவானி சங்கர் அதில் கூறியிருப்பதாவது, ’சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு நான் நாகரிகமான முறையில் பதில் சொன்னேன் . ஆனால் சிலர் அந்த பெண் மீது அசிங்கமான வார்த்தைகளை பிரயோகம் செய்திருந்தார்கள் . அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஆதரவாக பேசுவதற்காக மற்றொருவரை இழிவாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள முடியாது’ இவ்வாறு நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan